TNPSC Group 2 Result 2019: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் அவினாசியைச் சேர்ந்த சுபாஷினி மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் குரூப் 2 பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. மொத்தம் 1,338 பணியிடங்களுக்கு 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 14,797 பேர் தேர்ச்சிப் பெற்றனர்.
தொடர்ந்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது.
இந்த நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய தேர்வில், திருப்பூர் அவினாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுபாஷினி முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் பொருளாதார பாடப்பிரிவில் முதநிலைப் பட்டம் படித்து வருகிறார். குரூப் 2 தேர்வில் முதல் இடம் பிடித்த சுபாஷினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.