இன்பத்தின் எல்லையில் இனிய காட்சிகள்
இது எங்கள் சுதந்திரம்.. நீங்கள் யாரும் சமூக போலீஸ் ஆகவேண்டியதில்லை’ என்று போட்டோ எடுத்தவர்கள் சொல்ல, அதற்கு ‘இதெல்லாம் அனாவசியம்’ என்று பதில் வர, அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ‘பலருக்கு அனாவசியமாக இருப்பது சிலருக்கு அவசியமாக இருக்கிறது’ என்று பதில் வந்துவிழுந்திருக்கிறது.

 

கேரளாவில் உள்ள அருவி பகுதி ஒன்றில் புனேயை சேர்ந்த ராமும்- புதுப் பெண் கவுரியும் தங்கள் சேவ் த டேட்ஸ் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்கள். அதில் கவுரி அணிந்திருக்கும் உடலை ஒட்டிய மெல்லிய ஸ்டிரச் கவுனும், திருமணத்திற்கு முன்பே அவர்கள் கொடுத்த அதிக நெருக்கமாக காட்சியும்தான் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்த காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு போலீஸ், ‘கணவன் மனைவியாகிட்டீங்க.. ஆனால் இங்கே ஒரு குழந்தைகள் உலகமும் இருக்கிறது. அதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறது.

 

இந்த பரபரப்புக்கு முன்னாலும் சில ஜோடிகளின் போட்டோ ஷூட்கள் மக்களை வசீகரிக்கத்தான் செய்தது. சினிமா நடிகர் ஜான் கைப்பிள்ளில்- ஹெப்சிபா ஜோடி திருமணத்திற்கு பின்பு எடுத்த காட்சிகளும், ஜோஸ் கே.செரியன்- அனிஷா ஜோடி போஸ் கொடுத்த காட்சிகளும் பரபரப்புக்கு அடித்தளமிட்டன.

 

இது போன்ற போட்டோ ஷூட்கள் தேவையா? என்ற கேள்வி அதை பார்ப்பவர்களிடம் எழுகிறது. ஆனால் அந்த போட்டோகிராபர்களோ அடுத்தடுத்த புதுமைகளை செய்ய தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற பரபரப்புகள் ஏற்படும்போதெல்லாம் அந்த போட்டோகிராபர்கள் விழா எடுத்து கொண்டாடுகிறார்கள். ஏன்என்றால் இந்த கிளுகிளுப்பு போட்டோக்களை பார்ப்பவர்கள், அந்த போட்டோக்களை எடுத்தது யார் என்று இணையத்தளங்களில் தேடுகிறார்கள். அப்படி தம்மை பலரும் தேடவேண்டும் என்ற ஆவல் இந்த ‘வெட்டிங் போட்டோகிராபர்’களிடம் ஏற்பட்டிருக்கிறது.