இந்தியாவை பொறுத்தவரை, குட்டி நிலப்பரப்பில் திட்டமிடுதல் இன்றி கட்டப்பட்ட வீடுகளே அதிகம். 300 சதுர அடி, 500 சதுர அடி... போன்ற சிறிய நிலப்பரப்புகளில், எந்தவித திட்டமிடுதலும் இன்றி, இடத்தை அடைக்கும் வகையில், கட்டமைப்புகளை அமைத்து கொள்கின்றனர். என்ஜினீயர்களும் இதுபோன்ற சிறு கட்டமைப்புகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. பெரிய நிலப் பரப்பை, பல வசதிகளுடன் கட்டமைப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். அதனால்தான், நான் சிறு கட்டமைப்புகளில் (ஸ்மால் ஸ்கேல் கன்ஸ்ட்ரக்ஷன்) கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அதற்கான முதல்படி, இந்த ‘நடமாடும் வீடு’ (போர்டபிள் ஹவுஸ்).
சரக்கு ஆட்டோவில், பட்ஜெட் வீட்டை கட்டமைக்கும் ஆசை வந்தது எப்படி