இன்பத்தின் எல்லையில் இனிய காட்சிகள்
‘போட்டோ கிராபியில் இது ரொம்ப புதுசுங்க..’

 

- ‘இதெல்லாம் ரொம்ப மோசம்ங்க..’

 

... இப்படி இருவிதமாக மக்களை பேசவைக்கும் சில போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாக பரவிக்கொண்டிருக்கின்றன. அந்த காட்சிகள் ‘திருமண போட்டோகிராபியில் புதிய டிரென்ட்’ என்றும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘சேவ் த டேட்ஸ்’ என்ற அந்த படங்கள் இளைஞர்களை கிளுகிளுப்பாக்கிக்கொண்டிருக்கிறது. திருமண ஜோடி படுக்கை அறைக்குள் கட்டிப்பிடித்து உருளுவது, கடலில் நனைய நனைய கவர்ச்சியாக ஓடுவது, சகதிக்குள் உருண்டு புரள்வது போன்ற போட்டோக்கள் ‘உச்’ ரகம்.